ஆர்யாவுக்காக ஏடிஎம்கே-வில் இணையும் நயன்தாரா.?

Bookmark and Share

ஆர்யாவுக்காக ஏடிஎம்கே-வில் இணையும் நயன்தாரா.?

மலையாளத்தில் அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியான பெங்களூரு டேய்ஸ்'படம் தமிழில் ரீமேக் ஆகிறதல்லவா..? பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் இந்தப்படத்தை  பொம்மரிலு பாஸ்கர் இயக்குகிறார்.

இதற்கு பெயர் வைப்பதற்குள் இயக்குனர் பாஸ்கருக்கு நாக்கு தள்ளிவிடும்போல இருக்கிறது. முதலில் சிங்கப்பூர் டேய்ஸ்.. அப்புறம் இதுவும் கடந்து போகும் என டைட்டில்கள் ஒவ்வொன்றாக மாறி, இப்போது ஏ.டி.எம்.கே என பெயர் வைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதாவது படத்தின் கேரக்டர்களான அர்ஜூன், திவ்யா மற்றும் கார்த்திக் ஆகியோரின் முதல் எழுத்துக்கள் தான் டைட்டிலாக மாறியுள்ளது. ஆனால் மேலிடத்தில் இருந்து இதற்கான அனுமதி கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

பெங்களூரு டேய்ஸ் படத்தில் துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின் பாலி ஆகியோர் நடித்த கேரக்டர்களில் முறையே ஆர்யா, ராணா டகுபதி, பாபி சிம்ஹா ஆகிய மூவரும் நடிக்கிறார்கள்.

கதாநாயகியாக நஸ்ரியா நடித்த வேடத்தில் ஸ்ரீதிவ்யா நடிக்க, ஒரிஜினலில் பார்வதி மேனன் நடித்த கேரக்டரில் மீண்டும் அவரே நடிக்கிறார். ஆனால் நித்யா மேனன் நடித்த கேரக்டரில் அவரே நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது..

அனால் இப்போது லேட்டஸ்ட் தகவலாக நித்யா மேனன் ரோலில் நயன்தாரா நடிக்க இருக்கிறார் என செய்தி கசிந்துள்ளது. இது கூட படத்தில் ஆர்யாவின் லவ்வர் ரோல் என்பதால், ஆர்யாவின் ஸ்பெஷல் அழைப்பின் பேரில் தான் நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions