ஆர்யா நயன்தாரா மீண்டும் இணையும் படம்

Bookmark and Share

ஆர்யா நயன்தாரா மீண்டும் இணையும் படம்

ஆர்யா தமிழ்ப்படங்களில் நடித்து வந்தாலும்  தாய்மொழி மலையாளம்தான். அதனாலோ என்னவோ அவ்வப்போது மலையாளப்படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா.

ஏற்கெனவே, உருமி டபுள் பேரல்ஆகிய மலையாள படங்களில் நடித்துள்ள ஆர்யா தற்போது புதிய நியமம் என்ற மலையாள படத்தில் நடிக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தை முடித்துவிட்டு தற்போது புதிய நியமம் படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. இப்படத்தில் ஆர்யா நடித்தாலும் அவர் ஹீரோ இல்லை. மம்முட்டிதான் ஹீரோ.

கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரபலமான ஒரு வழக்கறிஞராக மம்முட்டி நடிக்கிறார். மம்முட்டியின் மனைவியாக நடிக்கிறார் நயன்தாரா. பாஸ் என்கிற பாஸ்கரன்,  ராஜா ராணி மற்றும் ஆரம்பம் படங்களில் இணைந்து நடித்த ஆர்யா, நயன்தாரா ஜோடி மீண்டும் இந்தப் படத்தில் இணைகிறார்கள். 


Post your comment





Related News
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions