ஆர்யா படத்தை வாங்கி வெளியிடும் உதயநிதி!

Bookmark and Share

ஆர்யா படத்தை வாங்கி வெளியிடும் உதயநிதி!

ஆர்யாவின் 25 ஆவது படமாக வெளிவர உள்ள படம் - வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க. ராஜேஷ் இயக்கி உள்ள இப்படத்தில் ஆர்யாவுக்கு இணையான வேடத்தில் சந்தானம் நடித்துள்ளார்.

கதாநாயகியாக தமன்னா நடித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடங்கியபோதே உதயநிதியை சந்தித்த ஆர்யா தான் தயாரிக்கும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தை நீங்கள் வாங்கி வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம்.

ஆர்யாவின் கோரிக்கையை அப்போதே ஏற்றுக்கொண்ட உதயநிதி, படத்தை முடித்த உடன் சொல்லுங்கள்... வாங்கிக் கொள்கிறேன் என்று உறுதி அளித்திருக்கிறார்.

தற்போது வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க பட பணிகள் நிறைவடைந்தநிலையில் அடுத்த மாதம் வெளியிடவும் தயாராகிவிட்டனர்.இந்நிலையில், அண்மையில் உதயநிதியை சந்தித்துள்ளார் ஆர்யா.

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க நல்லா வந்திருக்கு. அதனால் அந்தப்படத்தை ஏற்கனவே சொன்னபடி நீங்கள் ரிலீஸ் செய்ய வேண்டாம். நானே சொந்தமாக ரிலீஸ் செய்து கொள்கிறேன்.

என்று ஆர்யா சொன்னதைக் கேட்டு உதயநிதி லேசாக அதிர்ச்சியடைந்திருக்கிறார்.  ஆனாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் ஓகே பிரதர் என்று சொல்லி இருக்கிறார்.அதன் பிறகு நடந்ததுதான் ஹைலைட்..!

இந்த சந்திப்புக்குப் பிறகு தானே தியேட்டர்களை புக் பண்ண முயற்சி செய்து அதில் தோல்வி அடைந்திருக்கிறார் ஆர்யா. பிறகு உதயநிதியை மீண்டும் தொடர்பு கொண்டு நீங்களே தியேட்டர்களை புக் பண்ணிக்கொடுங்கள் அதற்கான சர்வீஸ்சார்ஜை கொடுத்துவிடுகிறேன் என்று சொன்னாராம். அதற்கும் சரி என்று சொல்லி இருக்கிறார் உதயநிதி.


Post your comment





Related News
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions