ஆர்யாவுக்காக இணைந்த சூர்யா, கார்த்தி, விஷால்

Bookmark and Share

ஆர்யாவுக்காக இணைந்த சூர்யா, கார்த்தி, விஷால்

ஆர்யா தற்போது ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவன் இயக்கத்தில் ‘கடம்பன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஆர்யா மலைவாழ் இளைஞனாக நடிக்கிறார்.

இதற்காக தனது உடல் எடையை அதிகரித்து நடித்து வருகிறார்.இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடித்து வருகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டீசரையும் படக்குழுவினர் வெளியிட முடிவு செய்துள்ளனர்.அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிடவிருக்கிறார்.

அதற்கு முன்னதாக 5 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கார்த்தியும், 5.30 மணிக்கு மற்றொரு போஸ்டரை விஷாலும் வெளியிடவிருக்கின்றனர். பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும், டீசரிலும் ஆர்யாவின் தோற்றம் எந்தமாதிரி இருக்கப்போகிறது என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Post your comment





Related News
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ
பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா! பதட்டமடைந்த சக போட்டியாளர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions