ஆர்யா பிரியாணி வேண்டாம்; அஜீத் பிரியாணி தான் வேண்டும் - பிந்து மாதவி

Bookmark and Share

ஆர்யா பிரியாணி வேண்டாம்; அஜீத் பிரியாணி தான் வேண்டும் - பிந்து மாதவி

சேரன் இயக்கிய ‘பொக்கிஷம்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த பிந்துமாதவி, ‘வெப்பம்’ படத்தில் இருநாயகிகளில் ஒருவராக நடித்து கதாநாயகியாக உருவெடுத்தார். பின்னர் ‘கழுகு’ படத்தின் மூலம் இவரது நடிப்பு பரவலாக பேசப்பட்டது. தொடந்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘தேசிங்கு ராஜா’, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

இந்நிலையில், தற்போது ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகர்களாக நகுல், ‘அட்டக்கத்தி’ தினேஷ் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். புதுமுக இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி வருகிறார். வருகிற பிப்ரவரி 20-ந் தேதி இப்படத்தை வெளியிடவிருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது பிந்து மாதவி தன்னுடைய ஆசைகளை TamilStar.Com வாசகர்களுக்காக பிரத்யேகமாக தெரிவித்தார். அவர் கூறும்போது,

இந்த படத்தில் நடித்தது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. எனக்கு அம்மன் கெட்டப்பில் நடிக்கவேண்டும் என்று நீண்டநாளாக ஆசை. சினிமாவை விட்டு விலகுவதற்குள் ஒரு படத்திலாவது அஜித்துக்கு ஜோடியாக நடித்துவிட வேண்டும்.

எனக்கு அஜித் என்றால் ரொம்பவும் பிடிக்கும். தமிழ் சினிமா நடிகர்களில் மிகவும் அழகானவர் அஜித்தான் என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது, 20 வயதிற்குள் யாரும் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்குள் நுழையக்கூடாது.

இந்த வயதுக்குள் என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் யாரும் சினிமாவில் நுழைய விருப்பம் தெரிவித்தால் அவர்களை வரவேற்க மாட்டேன். எனக்கு யாருடனும் இப்போது காதல் இல்லை. நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன் என்று கூறினார்.


Post your comment





Related News
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி
இந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறுவது இவரா? - வெளிவந்த அதிர்ச்சி புகைப்படம்.!
10 லட்சத்துடன் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறினாரா பிந்து?
செலவுக்காக துணிக்கடையில் வேலை செய்த பிரபல நடிகை!
விக்ரம் பிரபு ஜோடியாகும் பிந்து மாதவி
பிரபல நடிகைக்கு இயக்குனர் முதல் உதவி இயக்குனர் வரை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்களா? அவரே சொல்கிறார்
பிந்து மாதவியுடன் காதலா?: வருண் மணியன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions