அமீருடன் இணைந்து நடிக்கும் ஆர்யா?

Bookmark and Share

அமீருடன் இணைந்து நடிக்கும் ஆர்யா?

கடந்த ஆண்டு ஆர்யாவுக்கு அவ்வளவு சிறப்பாக இல்லை. புறம்போக்கு என்கிறபொதுவுடைமை, வாசுவும்சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, யட்சன், இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தார். 

புறம்போக்கு என்கிற பொதுவடைமை நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் பெரிதாக இல்லை என்று சொல்லப்பட்டது.

மற்றபடங்கள் எல்லாம் அவருக்குக் கைகொடுக்கவில்லை. பெங்களூர்டேஸ் படத்தின் தமிழாக்கத்தில் அவர் நடித்திருக்கும் படம் மட்டுமே கைவசம் உள்ளது. தொடர்ந்து, சூப்பர்குட்பிலிம்ஸ் தயாரிப்பில் மஞ்சப்பை ராகவன் இயக்கத்தில் ஒருபடத்தில் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அதைத் தொடர்ந்து அவர், இரண்டுநாயகர்கள் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்படத்தில் இன்னொரு நாயகராக இயக்குநர் அமீர் நடிக்கவிருக்கிறாராம். 

படத்தை முகவரி, தொட்டிஜெயா 2013 இல் வெளியான 6 உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படம் தொடர்பான பேச்சுவார்தைகள் வேகமாக நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வருமென்றும் சொல்கிறார்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions