ஆர்யாவின் அடுத்த பட போஸ்டர் வெளியீடு

Bookmark and Share

ஆர்யாவின் அடுத்த பட போஸ்டர் வெளியீடு

ஆர்யா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்கிறார். ராஜேஷ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இன்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில், ஆர்யா நடித்து வரும் மற்றொரு படமான ‘இஞ்சி இடுப்பழகி’ வேகமாக உருவாகி வருகிறது. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்து வருகிறார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ’ என்னும் பெயரில் வெளியாகவுள்ளது.

இன்று இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. ஆர்யாவின் படம் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வரும் நிலையில், தற்போது ஆர்யாவின் மற்றொரு படத்தின் போஸ்டர் வெளியாகி மேலும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறது.

இப்படத்தில் அனுஷ்கா மிகவும் குண்டான பெண்ணாகவும், அவருக்கு ஆர்யா அறிவுரை கூறி உடம்பை குறைப்பது போன்று கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பிவிபி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. 


Post your comment





Related News
‘இஞ்சி இடுப்பழகி’ இசையை வெளியிட்ட திரை பிரபலங்கள்
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!
இஞ்சி இடுப்பழகி என்ன கதை?
ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் \'இஞ்சி இடுப்பழகி\'
அனுஷ்காவுடன் மோதலா?: ஆர்யா விளக்கம்
இரண்டாம் உலகம் - முதல் படங்கள் வெளியாகியுள்ளன !
இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யா அனுஷ்கா தனித்தனி கதைகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions