ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் 'இஞ்சி இடுப்பழகி'

Bookmark and Share

ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் 'இஞ்சி இடுப்பழகி'

செல்வராகவன் இயக்கிய 'இரண்டாம் உலகம்' படத்திற்குப் பிறகு ஆர்யா, அனுஷ்கா நடிக்க தமிழ், தெலுங்கில் ஒரு புதிய படம் தயாராக உள்ளது. பிரகாஷ் இயக்கும் இந்தப் படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

தெலுங்கில் 'சைஸ் ஜீரோ' என பெயரிட்டுள்ள இந்தப் படத்திற்கு தமிழில் தற்போது 'இஞ்சி இடுப்பழகி' என பெயர் வைத்திருக்கிறார்கள். படத்திற்கேற்றபடி 'இஞ்சி'  அளவிற்கு இடுப்பழகை மாற்ற அனுஷ்கா இப்போதே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டாராம்.

முன்னாள் யோகா டீச்சரான அனுஷ்காவிற்கு உடலைக் குறைப்பது எளிதான விஷயம்தான். 'தேவர் மகன்' படத்தில் இளையராஜா இசையமைப்பில்  வாலி எழுத கமல்ஹாசன், ஜானகி பாடிய ஹிட் பாடலான 'இஞ்சி இடுப்பழகி...மஞ்ச சிவப்பழகி...

என்ற பாடலில் இடம் பெற்ற 'இஞ்சி இடுப்பழகி' யைத்தான் தற்போது தலைப்பாக வைத்துள்ளனர். பாடலோடு அந்த வார்த்தைகள் சேர்ந்திருக்கும் போது அழகாக உள்ளது. ஆனால், தனியாகச் சொல்லிப் பார்த்தால் வேறு மாதிரியாக இருக்கிறது.

காலை காட்சியில் திரையிடப்படும் அந்தக் கால மலையாளத் திரைப்படங்கள் போலத்தான் படத்தின் தலைப்பு அமைந்துள்ளது. யார் கொடுத்த ஐடியா என்று தெரியவில்லை. தமிழில் இந்த செய்தி பரவும் போது படத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் ஒரு வேளை மாற்றுவார்களோ என்னவோ...?


Post your comment





Related News
‘இஞ்சி இடுப்பழகி’ இசையை வெளியிட்ட திரை பிரபலங்கள்
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!
ஆர்யாவின் அடுத்த பட போஸ்டர் வெளியீடு
இஞ்சி இடுப்பழகி என்ன கதை?
அனுஷ்காவுடன் மோதலா?: ஆர்யா விளக்கம்
இரண்டாம் உலகம் - முதல் படங்கள் வெளியாகியுள்ளன !
இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யா அனுஷ்கா தனித்தனி கதைகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions