ஆர்யா, பாபி சிம்ஹா இணையும் புதிய படம்

Bookmark and Share

ஆர்யா, பாபி சிம்ஹா இணையும் புதிய படம்

தமிழில் ராஜபாட்டை, நான் ஈ, இரண்டாம் உலகம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மற்றும் தெலுங்கில் மூன்று படங்களையும் தயாரித்த பிரபல பட நிறுவனம் - பிவிபி சினிமா.

தற்போது நாகார்ஜுனா, கார்த்தி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிரம்மாண்டமான படத்தைத் தயாரித்து வரும் பிவிபி சினிமா நிறுவனம், அனுஷ்கா நடிப்பில் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தையும் தயாரித்து வருகிறது.

இதே படத்தை தெலுங்கில் சைஸ்ஜீரோ என்ற பெயரில் தயாரிக்கிறது. இதை அடுத்து தனது 11 ஆவது தயாரிப்பாக ஒரு படத்தைத் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா டகுபதி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர்.

இவர்களுடன் சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த பெங்களூர் டேஸ் படத்தின் ரீமேக் இது.

மிக பிரம்மாண்டமான திரைப்படமாக தயாராக உள்ள இப்படத்தை திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பொம்மரிலு பாஸ்கர். தமிழரான இவர் தெலுங்குப்படத்துறையில் முன்னணி இயக்குநராக இருப்பவர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாத இறுதியில் சென்னையில் தொடங்குகிறது. சென்னையை அடுத்து பெங்களூர், புனே, காசி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.


Post your comment





Related News
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions