ஆர்யாவுடன் மோதும் ஜெயம் ரவி

Bookmark and Share

ஆர்யாவுடன் மோதும் ஜெயம் ரவி

‘ரோமியோ ஜூலியட்’ படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி தற்போது நடித்துள்ள படம் ‘தனி ஒருவன்’. இப்படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கியிருக்கிறார்.

இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஆதி இசையமைத்துள்ளார்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படத்தின் பாடல்களை ஜூலை 22ம் தேதி வெளியிட உள்ளனர். படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியிட இருக்கின்றனர்.

அன்றைய தினத்தில் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, தமன்னா, சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படம் வெளியாக இருக்கிறது. இவ்விரு படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


Post your comment





Related News
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions