ஒரே படத்தில் தந்தை, மகளுடன் நடிக்கும் ஆர்யா!

Bookmark and Share

ஒரே படத்தில் தந்தை, மகளுடன் நடிக்கும் ஆர்யா!

‘பெங்களுர் நாட்கள்’ படத்தை தொடர்ந்து ஆர்யா நடிக்கும் புதிய படத்தை ‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் இயக்கி வருகிறார். ஆர்யா முதல்முறையாக காட்டுவாசியாக நடிக்கும் இப்படத்துக்கு கடம்பன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகளும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உறவினருமான மதுவந்தி, இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தனது தந்தை ஒய்.ஜி. மகேந்திரனுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிப்பதற்காக அவர் தனது உடல் எடையை 88 கிலோ வரை அதிரடியாக ஏற்றி மிரட்டலான ஒரு லுக்கிற்கு மாறியுள்ளார். ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கும் இப்படத்தை ஆர்யாவின் நண்பர் ஜீவா தயாரிக்கிறார். மேலும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions