கால்சீட் பிரச்சினையால் விலகி நிற்கும் ஆர்யா-நயன்தாரா!

Bookmark and Share

கால்சீட் பிரச்சினையால் விலகி நிற்கும் ஆர்யா-நயன்தாரா!

பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் ஜோடி சேர்ந்த ஆர்யா-நயன்தாரா இருவரும் பின்னர் தல அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் நடித்தனர். ஆனால் அந்த படத்தில் அஜித்துக்குத்தான் ஜோடியாக நடித்தார் நயன்தாரா.

அதையடுத்து, ராஜா ராணியில் ஆர்யா-நயன்தாரா இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்தனர். அதையடுத்து, பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகமான, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்திலும் நயன்தாராவையே நடிக்க வைக்க ஆசைப்பட்டார் ஆர்யா.

ஆனால் அவரோ, கைவசம் அரை டஜன் படங்களுக்குமேல் இருப்பதால் இப்போது கால்சீட் தருவது சாத்தியமில்லை என்று தட்டிக்கழித்து விட்டார். அதனால், வேறு வழியில்லாமல் தமன்னா பக்கம் சாய்ந்தார் ஆர்யா.

இருப்பினும், மீண்டும் நயன்தாராவுடன் நடிக்கும் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டிருப்பதால், மதராசப் பட்டினம் படத்தை அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்தில் நயன்தாராவுடன் டூயட் பாடியே தீருவது என்ற முடிவில் இருக்கும் ஆர்யா, தொடர்ந்து நயன்தாராவிடம் கால்சீட் கேட்டு வருகிறாராம். ஆனால், இப்போதும் அதே கால்சீட் பிரச்சினையைதான் முன் வைத்திருக்கிறாராம் நயன்தாரா.

 


Post your comment





Related News
நடிகைகளிடம் ஆர்யா செய்த சில்மிஷம் - உண்மைகளை போட்டுடைத்த நயன்தாரா.!
கலகலப்பு 2 அடுத்த மாதம் தொடங்குகிறது!
ஆர்யா – நயன்தாரா நடிப்பில் உருவாகும் கலகலப்பு 2!
மீண்டும் சேர்ந்து நடித்த ஆர்யா – நயன்தாரா!
பட கம்பெனி வைத்து வசூல்: ஆர்யா, நயன்தாரா பெயரில் மோசடி
நயன்தாரா என்னுடன் பேசினால் மற்றவர்களுக்கு என்ன? - ஆர்யா
இந்தியில் நுழையும் அஜீத்தின் ஆரம்பம்
அஜித்தை வில்லனாக்கும் விஷ்ணுவர்தன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions