`சங்கமித்ரா' படத்துக்காக ஹல்க் போல மாறும் ஆர்யா

Bookmark and Share

`சங்கமித்ரா' படத்துக்காக ஹல்க் போல மாறும் ஆர்யா

`மஞ்சப்பை' இயக்குநர் ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள `கடம்பன்' படம் திரைக்கு வர உள்ளது. முழுக்க முழுக்க  காடுகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் காட்டுவாசியாக நடித்துள்ள ஆர்யா இப்படத்திற்காக 91 கிலோ வரை உடல்  எடையை அதிகரித்தார். 

`கடம்பன்' படத்தை தொடர்ந்து ஆர்யா அமீர் நடிப்பில் `சந்தனத்தேவன்' படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில்,  ஜல்லிக்கட்டை மையாக வைத்து எடுக்கப்படவுள்ள `சந்தனத்தேவன்' படத்திற்காக ஆர்யா தனது உடல் எடையை குறைத்து  வருகிறார்.

பின்னர், சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள `சங்கமித்ரா' படத்தில் நடிக்க உள்ள ஆர்யா இப்படத்திற்காக  மீண்டும் உடல் எடையை அதிகரிக்க உள்ளாராம். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்க உள்ள  இப்படத்திற்காக ஆர்யா மீண்டும் உடல் எடையை அதிகரிக்க உள்ளாராம். அதாவது `கடம்பன்' படத்தில் இருப்பதைவிட உடல்  எடையை மேலும் அதிகரித்து ஹல்க் தோற்றத்திற்கு மாறச் சொல்லியிருக்கிறாராம் இயக்குநர் சுந்தர்.சி. இப்படத்திற்கான  படப்பிடிப்பு 2017 பிற்பாதியில் தொடங்க உள்ளது. 

மேலும் இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து ஜெயம் ரவியும் நடிக்க உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க  உள்ளார். `பஜ்ரோ மஸ்தானி' பட புகழ் சுதீப் சட்டர்ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.


Post your comment





Related News
கண் விழித்து பார்த்த அஜித் ரசிகர்களுக்கு கிடைத்த ஷாக்- புகைப்படம் உள்ளே
ஹாலிவுட் படங்களை வீழ்த்திய பாகுபலி 2! உலக அளவில் முதலிடம்
பாகுபலி 800 கோடி வசூல் செய்யும்! சொன்னது யார் தெரியுமா
`2.0' படம் குறித்த புதிய தகவலை வெளியிட்ட எமி ஜாக்சன்
படப்பிடிப்பில் அஜித் இப்படியும் செய்வார் தெரியுமா?
பாகுபலி 2... ரூ 1000 கோடியை எட்டுமா? ஒரு சிறப்பு பார்வை
பாகுபலி - தி கன்க்ளூசன்... இந்திய சினிமாவின் அடையாளம்!
அஜித் போல் நடிகர் கிடைத்ததற்கு தமிழ் சினிமா பெருமை கொள்ள வேண்டும்- பிரபல இயக்குனர்.
சுசிலீக்ஸுக்கு பொறுப்பேற்கிறேன், ஆனால்...: சுசித்ரா பேட்டி#suchileaks
என் எதிரிக்கும் வரக்கூடாத இந்த நிலைமை- லீக்கான புகைப்படங்கள் குறித்து பேசிய சுசீத்ரா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions