ஆர்யாவை சிரிக்க வைத்த விஎஸ்ஓபி!

Bookmark and Share

ஆர்யாவை சிரிக்க வைத்த விஎஸ்ஓபி!

ஆர்யாவின் மார்க்கெட்டை நிலைநிறுத்திய ஒரு படம்தான் பாஸ் என்கிற பாஸ்கரன். இந்த படத்தில் அவருடன் சந்தானமும் முக்கிய ரோலில் நடித்திருந்தார். நயன்தாரா நாயகி. அவருக்கு சாதாரணமான ரோல்தான். ஆனால் ஆர்யாவுடன் சேர்ந்து கொண்டு சந்தானம் அடித்த லூட்டிகள்தான் அப்படத்துக்கு வெற்றியாக அமைந்தது.

அதனால்தான் பின்னர் தொடர்ந்து தனது படங்களில் சந்தானத்தை சேர்த்துக்கொண்டு வந்தார் ஆர்யா. அந்த வகையில், அதன்பிறகு அவர்கள் கூட்டணி அமைத்த சேட்டை, ராஜா ராணி படங்களிலும் காமெடி ஒர்க்அவுட்டானது.

இந்த நிலையில், தற்போது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை இயக்கிய ராஜேஷ்.எம் இயக்கும் விஎஸ்ஓபி என்கிற வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்திலும் அதிரடியான காமெடி காட்சிகள் உள்ளதாம். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது காமெடி காட்சிகளில் நடிக்கும்போது ஆர்யா-சந்தானம் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்களாம். அந்த அளவுக்கு முந்தைய படங்களை முறியடிக்கும் வகையில் காமெடி காட்சிகளை வைத்திருக்கிறாராம் ராஜேஷ்.எம்.

தற்போது டப்பிங் பேசும்போது, அவ்வப்போது கெக்க புக்க என்று அடக்க முடியாமல் சிரிக்கிறாராம் ஆர்யா. அதனால் அவர் சிரிப்பதைப்பார்த்து மற்றவர்களும் சிரிக்க டப்பிங் தியேட்டரே ஒரே சிரிப்பு மயமாகிக்கொண்டிருக்கிறதாம்


Post your comment





Related News
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ
பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா! பதட்டமடைந்த சக போட்டியாளர்கள்
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions