சந்தானத்துக்கு விட்டுக்கொடுத்த ஆர்யா!

Bookmark and Share

சந்தானத்துக்கு விட்டுக்கொடுத்த ஆர்யா!

காதல் கதைகளில் மட்டுமே அதிகமாக நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஆர்யாவுக்கு அதிர்ச்சி தோல்விகளாக அமைந்து வந்தன. அப்போதுதான் காதலோடு காமெடியும் கலந்து நடிக்கும் பாஸ் என்ற பாஸ்கரன் கதையில் அவரை நடிக்க வைத்தார் ராஜேஷ்.எம் அப்படம் ஆர்யாவுக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது.

அதற்கு சந்தானமும் முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார். அதனால்தான் அதன்பிறகு தான் நடித்த பல படங்களில் சந்தானத்தையும் கூட்டு சேர்த்துக்கொண்டு நடித்து வெற்றிக்கனிகளை பறித்து வந்தார் ஆர்யா. அதன்காரணமாகவே ஆர்யா-சந்தானத்திற்கிடையிலான நட்பும் இறுக்கமாகி விட்டது.

அதனால் தற்போது மீண்டும் ராஜேஷ்.எம்மின் இயக்கத்தில் தான் நடித்து வரும் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்திலும் சந்தானத்துடன் நடித்து வரும் ஆர்யா, முந்தைய படங்களில் காமெடி காட்சிகளில் அவரை பேச வைத்து தான் வேடிக்கை பார்த்து வந்தவர், இந்த படத்தில் காதல் காட்சிகளிலும்கூட அவரை நடிக்க வைத்து தான் வேடிக்கை பார்த்திருக்கிறாராம்.

அந்த வகையில், இதுவரை தான் காமெடியனாக நடித்த படங்களில் ஹீரோயினிகளை கலாய்ப்பதோடு நிறுத்தி வந்த சந்தானம், இந்த படத்தில் தமன்னாவுடன் ரொமான்ஸ் காட்சிகளிலும் நடித்து கலக்கியிருக்கிறாராம்.

ஆனால் ஏதாவது ஒரு வகையில் நடிகைகளை கலாய்க்க வேண்டும் என்கிற கொள்கையுடன் இருக்கும் சந்தானம், இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது பெரும்பாலான நேரங்களில் தமன்னாவை கலாய்ப்பதிலேயே பொழுதை கழித்துக்கொண்டிருந்தாராம்.

ஆனால் தான் நீண்டகாலமாக செய்து வந்த கலாய்ப்பு வேலை இப்போது ஆர்யாவுக்கு அலுத்து விட்டதால், இந்த விசயத்தில் அவர் சந்தானத்துடன் போட்டிபோடாமல் அவருக்கு விட்டுக்கொடுத்து விட்டாராம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions