ஆர்யாவின் தம்பி சத்யா போடும் முதல் கண்டிசன்!

Bookmark and Share

ஆர்யாவின் தம்பி சத்யா போடும் முதல் கண்டிசன்!

ஆர்யாவின் தம்பி சத்யா பெங்களூரில் படித்துக்கொண்டிருந்தவர். அவ்வப்போது சென்னைக்கு வந்து போய் கொண்டிருந்த அவர், ஆர்யாவை சந்திக்க செல்லும் சினிமாக்காரர்களின் கண்ணில்பட்டார்.

விளைவு, உங்க வீட்டில் இன்னொரு ஹீரோ ரெடியாகிக்கிட்டிருக்காரு போல என்று ஆர்யாவிடம் சொல்லியிருக்கிறார்கள். அது சத்யாவின் காதிலும் விழுந்திருக்கிறது. விளைவு, நானும் சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்று தனது ஆசையை அண்ணன் ஆர்யாவிடம் அவுட் பண்ணியிருக்கிறார்.  

அது ஆர்யாவுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. சினிமாவில் ஜெயிக்கிறது அத்தனை சுலபமான விசயமல்ல என்று அட்வைஸ் செய்திருக்கிறார். ஆனால் தம்பி சத்யா கேட்கவில்லை.  

அதனால் வேறு வழியில்லாமல் படித்துறை என்று சொந்த படமெடுத்தே சத்யாவை அறிமுகம் செய்தார்.  ஆனால் அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதையடுத்து புத்தகம், அமரகாவியம், எட்டுத்திக்கும் மதயானை போன்ற படங்களில் நடித்த சத்யா, இப்போதும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஆனால் எந்த படமும் வெற்றிபெறவில்லை.

இருப்பினும் சத்யாவை வைத்து படம் பண்ணினால் ஆர்யா ஏதாவது ஒரு விதத்தில் உதவி செய்வார் என்ற நம்பிக்கையில் அடுத்தடுத்து சத்யாவிடம்  கதை சொல்லி வருகிறார்கள் டைரக்டர்கள்.

ஆனால், இதை தெரிந்து கொள்ளும் சத்யாவோ, டைரக்டர்களிடம் கதையை கேட்பதற்கு முன்பே, நான் நடிப்பது பற்றி பிரச்சினை இல்லை. ஆனால் அதை காரணமாக வைத்துக்கொண்டு அண்ணனிடம் பைனான்ஸ் உதவி கேட்கக்கூடாது.

அதோடு, படம் நன்றாக இருந்தால் ரிலீஸ் நேரத்தில் அவரே உதவி செய்வார். ஆனால், படம் சரியில்லை என்றால் அவர் தலையிட மாட்டார். அதனால் அண்ணன் உதவி செய்ய வேண்டுமென்றால் நீங்கள் படத்தை நன்றாக எடுக்க வேண்டும் என்று முன்னமே தனது முதல் கண்டிசனை போட்டு விட்டே கதை கேட்க காதுகளை திறக்கிறார் சத்யா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions