உனக்கு வேற வேலையே இல்லையா...? ஆர்யாவை அதட்டிய டாப்ஸி...

Bookmark and Share

உனக்கு வேற வேலையே இல்லையா...? ஆர்யாவை அதட்டிய டாப்ஸி...

ரசிகர்களைக் கண்டால் ஓடிஒளிவார்கள் நட்சத்திரங்கள். சோஷியல் மீடியாக்கள் பிரபலமான பிறகு பல விஷயங்களையும் தாங்களே முன் வந்து ரசிகர்களிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் ட்விட்டரில் #asktrishkrish என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி நடிகை த்ரிஷா ரசிகர்களின் சுவாரஸ்யமான பல கேள்விகளுக்கு பதில் சொன்னார்.

அவற்றில் பல கேள்விகள் ரசிகர்களுக்கு தெரியாத புதிய விஷயங்களாக இருந்தன. த்ரிஷாவைத்தொடர்ந்த தற்போது டாப்ஸியும் ட்விட்டரில் லைவ்வாக பதில் அளித்து வருகிறார்./ Taapseelivechat  என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி  டாப்ஸி பதில் அளித்து வருகிறார். டாப்ஸி லைவ்வில் இருப்பதை அறிந்ததும் அவரை சூப்பராக கலாய்த்தார் ஆர்யா.

ஹலோ டார்லிங்... உங்க அழகுக்கு என்ன ரகசியம்? ப்ளீஸ் எனக்கு பதில் சொல்லுங்க (hello darling unghe azhaghekhe (spotless beauty) enna ragasiyum pls answer meeee)என்று கேள்வி கேட்டார் ஆர்யா.

வேற வேலையில்லையா என்ற ரீதியில் (joblesss u r) டாப்ஸி பதில் சொல்ல, ஹாஹா... என்ன பண்றது... நாங்க வேலையில்லாதவங்கதான்.

ஆனா... என் கேள்விக்கு நீ பதில் சொல்லியே தீரணும் ( hahahahah wat to do .. We all r jobless but I need the answer for my question) என்று மீண்டும் கலாய்த்தார் ஆர்யா செல்லமாக கோபப்பட்ட டாப்ஸி, போடா போய் சைக்கிள் ஓட்டு.. (go da! go cycle away to glory! go for olympics next time) என்று பதிலுக்கு நக்கலடித்தார்.

மொத்தத்தில் டாப்ஸி - ஆர்யா சாட்டிங் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக இருந்தது. 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions