ஆகஸ்ட் 15 அன்று ஆர்யா படம்

Bookmark and Share

ஆகஸ்ட் 15 அன்று ஆர்யா படம்

பெரிய நட்சத்திரங்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் பண்டிகை நாட்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சில வாரங்களுக்கு முன் அறிவித்தது. இந்த அறிவிப்பினால் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்கள் பண்டிகை தினங்களைத் தேடும்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

விஜய் நடிக்கும் புலி வினாயகர் சதுர்த்தியை ரிசர்வ் செய்து வைத்துள்ளது. மற்ற நட்சத்திரங்களின் படங்களும் பண்டிகையை குறி வைத்து காத்திருக்கின்றன.

பெரிய படங்கள் வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த பண்டிகை தினத்தில் சுதந்திர தினமும் அடக்கம். ராஜேஷ் எம் இயக்கத்தில் ஆர்யா, தமன்னா, சந்தானம் நடித்திருக்கும் விஎஸ்ஓபி என்கிற 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு  ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள் 'விஎஸ்ஓபி' படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து டப்பிங், எடிட்டிங் வேலைகள் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன.

'விஎஸ்ஓபி' படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்கை இந்த மாதத்திலும், ஜூலை மாதத்தில்  படத்தின் பாடல்களையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்திற்குப் பிறகு இயக்குனர் ராஜேஷ், ஆர்யா, சந்தானம் மூவரும் மீண்டும் இணைந்திருப்பதால் 'விஎஸ்ஓபி' படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில் ராஜேஷ் இயக்கிய கடைசியாக அழகுசுந்தரம் படம் தோல்வியடைந்துள்ளதால்,  'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தின் பிசினசில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற கவலையிலும் இருக்கிறாராம் ராஜேஷ். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions