பெங்களூரில் இருந்து சென்னைக்கு வரும் ஆர்யா-தமன்னா

Bookmark and Share

பெங்களூரில் இருந்து சென்னைக்கு வரும் ஆர்யா-தமன்னா

ஆர்யா-தமன்னா ஜோடி தற்போது ராஜேஷ் இயக்கத்தில் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என்னும் படத்தில் நடித்து வருகிறார்கள். ராஜேஷின் படங்களில் மையமாக விளங்கும் சந்தானம் இந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பெங்களூரில் படப்பிடிப்பை முடிக்கவுள்ளனர். இதையடுத்து அடுத்த கட்டமாக சென்னையில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.

சென்னையில் இரண்டு பாடல்களை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த இரண்டு பாடல்களுக்காக பிரம்மாண்டமாக செட் அமைக்க இருக்கிறார்களாம். இப்படத்தில் விஷால் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions