ஜாலியான கதைகளையே விரும்பும் ஆர்யா!

Bookmark and Share

ஜாலியான கதைகளையே விரும்பும் ஆர்யா!

ஒரு சேஞ்சுக்காகத்தான் புறம்போக்கு படத்தில் புரட்சியாளராக நடித்தார் ஆர்யா. தன்னை அந்த மாதிரியான வேடத்தில் பார்க்கும் ரசிகர்களுக்கு அது புதிய அனுபவமாக இருக்கும் என்பதுதான் அவரது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் நடந்ததோ வேறு. அவரது பெருவாரியான ரசிகர்களுக்கு அவரை அந்த மாதிரி ரப் அண்ட் டப்பாக பார்த்ததே பிடிக்கவில்லையாம்.

இதை அவரது நட்பு வட்டாரம் மட்டுமின்றி, ரசிகர்களே தெரிவித்து விட்டதால், இனிமேல் மூடி டைப்பான வேடங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் ஆர்யா. குறிப்பாக, தான் கலகலப்பான வேடங்களில் நடித்த படங்களே தனக்கு வெற்றியாகவும் அமைந்திருப்பதை நினைவு கூர்ந்து வருகிறார் அவர்.

அதோடு, தன்னிடம் தற்போது கதை சொல்பவர்கள், ஆக்சன் டைப்பான கதைகளை சொன்னால், பாஸ் இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. அதனால் அடிதடிய கொஞ்சம் கம்மி பண்ணிட்டு காமெடிய கலந்திடுங்க. அதுதான் என்னோட ரசிகர்களுக்கு பிடிக்கும் என்கிறாராம் ஆர்யா.

அந்த வகையில், தற்போது ராஜேஷ்.எம் இயக்கத்தில் சந்தானத்துடன் இணைந்து ஆர்யா நடித்து வரும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படம் இதற்கு முன்பு அவர்கள் கூட்டணி இணைந்த பாஸ் என்கிற பாஸ்கரனை விட அதிரடியான காமெடி காட்சிகளில் தயாராகி உள்ளதாம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions