அரசியல் த்ரில்லர் படத்தில் ஆர்யா

Bookmark and Share

அரசியல் த்ரில்லர் படத்தில் ஆர்யா

உலக நாயகன் கமலஹாசனாலேயே, அடுத்த காதல் இளவரசன் என்று குறிப்பி்டப்பட்ட நடிகர் ஆர்யா, விரைவில், அரசியல் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க உள்ளார்.

ஆர்யா, பெரும்பாலும் காதல் சம்பந்தமான படங்களிலேயே தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஆர்யாவின் சகோதரர் சத்யா சமீபத்தி்ல் நடித்து வெளியான அமரகாவியம் படத்தை இயக்கிய ஜீவா ஷங்கரின் இயக்கத்தில் உருவாக உள்ள அரசியல் த்ரில்லர் படத்தில் ஆர்யா நடிக்க உள்ளார்.

தற்போது ஒப்பந்தமாகியுள்ள படங்களை முடித்தபிறகு, இந்த அரசியல் த்ரில்லர் படத்தில் ஆர்யா நடிக்க இருப்பதாக, ஜீவா ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions