பங்களாவுக்கு அதிக மின்கட்டணம் விதிப்பதாக பாடகி ஆஷா போஸ்லே குற்றச்சாட்டு

Bookmark and Share

பங்களாவுக்கு அதிக மின்கட்டணம் விதிப்பதாக பாடகி ஆஷா போஸ்லே குற்றச்சாட்டு

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவுக்கு பசுமை கொஞ்சும் புனே லோனவாலா பகுதியில் துங்கர்லி ஏரி அருகே பங்களா வீடு ஒன்று உள்ளது. இந்த பங்களாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் வழக்கத்தை விட அதிகப்படியான மின்கட்டணம் விதிக்கப்பட்டதாக ஆஷா போஸ்லே குற்றம்சாட்டி இருக்கிறார்.

மேலும், இந்த பங்களாவை தான் அதிகமாக பயன்படுத்தப்படுத்தாத போதிலும், இவ்வாறு விதிக்கப்பட்ட மின்கட்டண தொகை, தன்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தை மும்பை நகர பாரதீய ஜனதா தலைவர் ஆசிஷ் ஷெலார், மின்சாரத்துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலேயிடம் கொண்டு சென்றார். இதன்பேரில், ஆஷா போஸ்லேயின் குற்றச்சாட்டுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சந்திரசேகர் பவன்குலே உத்தரவிட்டார். 

இதனிடையே, ஆசிஷ் ஷெலார் வெளியிட்ட அறிக்கையில், “செப்டம்பரில் ஆஷா போஸ்லே பங்களாவுக்கு ரூ.16 ஆயிரத்து 411 மின்கட்டணம் ஆனதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. அதேசமயம், முந்தைய மாதங்களில் அவர் ரூ.37 ஆயிரத்து 168 பாக்கி வைத்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார். 


Post your comment





Related News
இப்போதைக்கு குழந்தை பெறும் எண்ணம் இல்லை- பிரபல நாயகி
ஷாருக்கானின் ரொமான்ஸ் படம் இவ்வளவு ரூபாய்க்கு விலை போனதா?
என்றுமே ஒரே சூப்பர் ஸ்டார், 3 நாள் வசூலை அள்ளிய பாட்ஷா
மீண்டும் களை கட்டிய பாட்ஷா… அத்தனை அரங்குகளும் ஹவுஸ்ஃபுல்!
வாய்ப்புக்காக ஷங்கருக்கு அரை நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய SMS ஹீரோயின்?
சென்னையில் பாட்ஷாவுக்கு எத்தனை தியேட்டர் தெரியுமா... பிரமித்து நிற்கும் தமிழ் திரையுலகம்!
சந்து கேப்பில் ஷாருக்கானை நைசா தொட்டேனே: துள்ளும் கமலின் 'அந்த' மகள்
டிஜிட்டல் பாட்ஷாவுக்கு புதிதாய் பின்னணி இசையமைத்த தேவா!
ரஜினியின் ப்ளாக்பஸ்டர் பாட்ஷா டிஜிட்டலில் வெளியாகிறது!
நடிகை பூஜை ரகசிய திருமணம் செய்துகொண்டார் – மாப்பிள்ளை யார் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions