போலீஸ் அதிகாரியாக நடித்த நடிகைக்கு வீடியோவால் பாதிப்பில்லை!

Bookmark and Share

போலீஸ் அதிகாரியாக நடித்த நடிகைக்கு வீடியோவால் பாதிப்பில்லை!

மலையாளத்திலும் த்ரிஷ்யம், தமிழில் பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் நடிகை ஆஷாசரத். தற்போது தூங்காவனம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்துவருகிறார். தற்போது ஆஷாசரத்தின் ஆபாச வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி நடிகை ஆஷாசரத் போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் அளித்தார். இதன் தொடர்பாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி ஆஷா கூறும்போது, எனது பெயரில் போலி ஆபாச வீடியோ வெளியானபோது  அதிர்ச்சியடைந்தேன். நான் திருமணம் ஆன பெண். 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.  ஆனால் அந்த வீடியோவால் எனது வாழ்க்கை பாதிக்கப்பட வில்லை.

அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். சூட்டிங்கிற்காக நான் பல இடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது .  அப்போது காமிராவில் ரகசியமாக படம் எடுக்கப்பட்டதா என யோசித்தேன். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். ஏனென்றால் வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நாளில் நான் சொந்த ஊரில்தான் இருந்தேன்.  

இதனால் காவல்துறைக்கு புகார் கொடுத்துவிட்டேன் என்றார். அவர்கள் விசாரித்து 2 கைதிகளை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்தியுள்ளனர். இந்த வீடியோவை எதற்கு வெளியிட்டார்கள் என்பதை விசாரித்தபோது அதனை வைத்து வலைதளங்களில் வெளியிட்டு பணம் சம்பாதிப்பது தெரியவந்தது..

நான் எனக்காக மட்டும் போராடவில்லை. எல்லா பெண்களுக்காகவும்தான் போலீசில் புகார் செய்தேன். இதனால் எனது 2 பெண் குழந்தைகளுக்கும் இதுபற்றி எடுத்துக்கூறி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளேன். எனக்கு பிரச்சினை ஏற்பட்டபோது எல்லோரும் உதவினார்கள்.

அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.  சமூகவலைதளங்களில் எனது படத்துடன் செய்தி வெளிவந்ததால் அதற்கான விமர்சனங்கள் வாசிக்கமுடியாத அளவுக்கு மிக மோசமாக உள்ளது. இதுபோன்ற நிலை மாறவேண்டும் என்றார்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions