குத்தாட்டத்தில் பிசியாகும் மஸ்காரா நடிகை அஷ்மிதா!

Bookmark and Share

குத்தாட்டத்தில் பிசியாகும் மஸ்காரா நடிகை அஷ்மிதா!

வில்லன், சாமிபுள்ள உள்பட சில படங்களில் நடித்தவர் அஷ்மிதா. இதில் இவர் நாயகியாக நடித்த படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் படத்தில் மஸ்காரா போட்டு மயக்குறியே -என்ற பாடலில் குத்தாட்ட நடிகையாக அதிரடி ஆட்டம் போட்டார்.

அந்த பாடல் சூப்பர் ஹிட்டானதால் அஷ்மிதாவின் குத்தாட்டத்துக்கு மார்க்கெட் எகிறி நிற்கிறது. அதையடுத்து இரண்டு தெலுங்கு படங்களில் சூப்பர் ஆட்டம் போட்டு விட்டு வந்திருக்கும் அஷ்மிதா, தற்போது விழித்திரு படத்தில் டி.ராஜேந்தர் குத்தாட்டம் போடும் பரப்பரபாம் என்ற பாடலில் அவருடன் இணைந்து செம ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்.

சென்னையிலுள்ள டி.ஆர் கார்டனில் இந்த பாடல் இரண்டு நாட்கள் படமாக்கப்பட்டது. ஆனால் இன்னும் மொத்த பாடலும் படமாக்கப்படவில்லையாம்.

அதனால் இன்னும் சில நாட்களில் மேலும் 2 நாட்கள் அந்த பாடல் படமாக்கப்பட உள்ளதாம். இந்த பாடலில் மஸ்காரா பாடலை விடவும் செக்ஸியான மூவ்மெண்டுகளை கொடுத்து ஆடி வரும் அஷ்மிதா, இதன்பிறகு பாலிவுட்டிலும் முழுக்க மிகப்பெரிய குத்துப்பாட்டு நடிகையாக வேண்டும் என்றும் தீவிர முயற்சி எடுத்து வருகிறாராம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions