இயக்குனர்களுக்கு தொல்லை கொடுக்கும் சந்தானம் நாயகி

Bookmark and Share

இயக்குனர்களுக்கு தொல்லை கொடுக்கும் சந்தானம் நாயகி

மும்பையை சேர்ந்தவர் ஆஸ்னா ஜவேரி. சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயும் படம் மூலம் ஹீரோயின் ஆனவர். இதையடுத்து மீண்டும் சந்தானத்துடன் சேர்ந்து இனிமே இப்படித்தான் படத்திலும் நடித்தார். தற்போது அவர் தமிழ் படங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆஸ்னா நகுல் ஜோடியாக பிரம்மா. காம் படத்திலும், ஆரி ஜோடியாக நாகேஷ் திரையரங்கம் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் ஒரு புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்க விரும்பும் ஆஸ்னா தமிழ் கற்றுக் கொண்டுள்ளார்.

தற்போது அவர் நன்றாக தமிழில் பேசி அசத்துகிறார். முதல் இரண்டு படங்களில் நடித்தபோது அவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. தனக்கு தமிழ் பேச வராது என்று கூறி ஒதுக்கிய இயக்குனர்களை அணுகி பார்த்தீங்களா எப்படி தமிழ் பேசுகிறேன், இப்ப நீங்க எனக்கு சான்ஸ் கொடுத்தே ஆக வேண்டும் என்று அன்புத் தொல்லை கொடுக்கிறாராம் ஆஸ்னா.


Post your comment





Related News
மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு
விஸ்வரூபம் 2 இருக்கட்டும், சபாஷ்நாயுடு படத்துக்கும் பிரச்சனையா?
ஒரு தியேட்டரை மையப்படுத்தி உருவாகும் நாகேஷ் திரையரங்கம்!
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பயணித்த சந்தானம் நாயகி
ஆஷ்னா சவேரிக்கு மீண்டும் கைகொடுப்பாரா சந்தானம்?
சந்தானத்துடன் நடிக்க எந்த நாயகியும் ஒப்புக்கொள்வார்கள்: ஆஷ்னா சவேரி
சந்தானத்தின் மீது ஆஷ்னா ஜாவேரி வருத்தம்!
ஆஷ்னாசாவேரிக்கு ஆர்யா கொடுத்த வாக்குறுதி!
சென்டிமென்டை உடைக்கும் ஆஷ்னா சாவேரி!
மீண்டும் சொந்த தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கும் சந்தானம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions