ஆஷ்னாசாவேரிக்கு ஆர்யா கொடுத்த வாக்குறுதி!

Bookmark and Share

ஆஷ்னாசாவேரிக்கு ஆர்யா கொடுத்த வாக்குறுதி!

சந்தானம் நாயகனாக நடித்த முதல் படமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்தவர் ஆஷ்னா சாவேரி. அதையடுத்து தான் நடித்துள்ள இனிமே இப்படித்தான் படத்திலும் அவரையே நாயகியாக்கியிருக்கிறார் சந்தானம்.

முதல் படத்தைவிட இந்த படத்தில் சந்தானத்துடன் அதிக நெருக்கம் காட்டி நடித்துள்ள ஆஷ்னா, பாடல் காட்சிகளில் அதிக கிளாமராகவும் நடித்துள்ளாராம். அப்படி அவர் நடித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற ஆர்யா, அவர்களின் ஜோடியை ரொம்ப பெருமையாக பேசிக்கொண்டிருந்தாராம்.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சந்தானத்துடன் இரண்டு படங்களில் நடித்து விட்டேன். அடுத்து வேறு ஹீரோக்களுடனும் டூயட் பாட ஆசைப்படுகிறேன். அது ஏன் நீங்களாக இருக்கக்கூடாது என்றாராம்.

ஏற்கனவே நடிகைகளுக்கு சிபாரிசு செய்வதில் முதல் ஆளாக இருந்து வரும் ஆர்யா, இப்போது கமிட்டான படங்களுக்கு ஹீரோயினி ஓகே ஆகிவிட்டது. அதனால் நான் புதிதாக கமிட்டாகும் படங்களில் சிபாரிசு செய்கிறேன் என்று கூறியுள்ளாராம்.

ஆக, காமெடியனுடன் நடித்த தன்னை மற்றவர்கள் அரவணைக்க மாட்டார்களோ என்ற உள்பயத்தில் இருந்து வந்த ஆஷ்னாசாவேரி, இப்போது ஆர்யாவே நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை கொடுத்து விட்டதால், தமிழில் தனக்கு ஒரு இடம் கிடைக்கும் என்று உற்சாகத்துடன் காணப்படுகிறார். 


Post your comment





Related News
மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு
இயக்குனர்களுக்கு தொல்லை கொடுக்கும் சந்தானம் நாயகி
விஸ்வரூபம் 2 இருக்கட்டும், சபாஷ்நாயுடு படத்துக்கும் பிரச்சனையா?
ஒரு தியேட்டரை மையப்படுத்தி உருவாகும் நாகேஷ் திரையரங்கம்!
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பயணித்த சந்தானம் நாயகி
ஆஷ்னா சவேரிக்கு மீண்டும் கைகொடுப்பாரா சந்தானம்?
சந்தானத்துடன் நடிக்க எந்த நாயகியும் ஒப்புக்கொள்வார்கள்: ஆஷ்னா சவேரி
சந்தானத்தின் மீது ஆஷ்னா ஜாவேரி வருத்தம்!
சென்டிமென்டை உடைக்கும் ஆஷ்னா சாவேரி!
மீண்டும் சொந்த தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கும் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions