சந்தானத்தின் மீது ஆஷ்னா ஜாவேரி வருத்தம்!

Bookmark and Share

சந்தானத்தின் மீது ஆஷ்னா ஜாவேரி வருத்தம்!

சந்தானம் நாயகனாக நடித்த முதல் படமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா ஜாவேரி. அதையடுத்து தற்போது தான் நடித்துள்ள இனிமே இப்படித்தான் படத்திலும் ஆஷ்னாவே முக்கிய ஹீரோயினியாக்கி இருக்கிறார் சந்தானம்.

இன்னொரு நாயகியாக கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த கன்னட நடிகை அகிலா கிஷோர் நடித்துள்ளார். ஆனால், இனிமே இப்படித்தான் படத்தின் ஆடியோ விழாவின்போது, ஆஷ்னாவின் நடிப்பைப்பற்றி இரண்டொரு வார்த்தைகூட புகழாத சந்தானம்.

இந்த படத்திற்குகூட முன்னணி நாயகிகளைத்தான் நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால், நான் இந்த படத்தில் நடித்தபோது பல படங்களில் காமெடியனாகவும் நடித்து வந்ததால், அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது மட்டுமே இப்படத்தில் நடித்தேன்.

ஆனால் நான் கால்சீட் கேட்கிற நேரங்களில் எல்லாம் முன்னணி நடிகைகள் கால்சீட் தருவது கடினம். அதனால்தான் நான் அழைக்கும்போதெல்லாம் வந்து நடிக்கக்கூடிய நடிகையாக தேடியபோதுதான், ஆஷ்னா ஜாவேரியையே மீண்டும் புக் பண்ணினேன் என்று கூறினார்.

ஆனால், அவசரத்துக்கு வேறு நடிகை கிடைக்க மாட்டார்கள் என்பதினால்தான் தன்னை சந்தானம் புக் பண்ணியிருக்கிறார். மற்றபடி தனது நடிப்பு பிடித்ததினால் அல்ல என்பதை அறிந்து பீல் பண்ணினாராம் ஆஷ்னா.

அதோடு, தான் ஏற்கனவே வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அவருடன் நடித்திருந்தும், தன்னை அவர் மீண்டும் புதுமுக நடிகை என்று குறிப்பிட்டது ஆஷ்னா ஜாவேரிக்கு இன்னும் வருத்தத்தைக் கொடுத்து விட்டதாம். 


Post your comment





Related News
மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு
இயக்குனர்களுக்கு தொல்லை கொடுக்கும் சந்தானம் நாயகி
விஸ்வரூபம் 2 இருக்கட்டும், சபாஷ்நாயுடு படத்துக்கும் பிரச்சனையா?
ஒரு தியேட்டரை மையப்படுத்தி உருவாகும் நாகேஷ் திரையரங்கம்!
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பயணித்த சந்தானம் நாயகி
ஆஷ்னா சவேரிக்கு மீண்டும் கைகொடுப்பாரா சந்தானம்?
சந்தானத்துடன் நடிக்க எந்த நாயகியும் ஒப்புக்கொள்வார்கள்: ஆஷ்னா சவேரி
ஆஷ்னாசாவேரிக்கு ஆர்யா கொடுத்த வாக்குறுதி!
சென்டிமென்டை உடைக்கும் ஆஷ்னா சாவேரி!
மீண்டும் சொந்த தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கும் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions