சந்தானத்துடன் நடிக்க எந்த நாயகியும் ஒப்புக்கொள்வார்கள்: ஆஷ்னா சவேரி

Bookmark and Share

சந்தானத்துடன் நடிக்க எந்த நாயகியும் ஒப்புக்கொள்வார்கள்: ஆஷ்னா சவேரி

சந்தானம் நடிப்பில் வெளிவந்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஆஷ்னா சவேரி. இப்படத்தை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தின் வெற்றி குறித்து ஆஷ்னா சவேரி கூறும்போது, ‘இனிமே இப்படித்தான்’ படத்திற்கு கிடைத்துள்ள ஆதரவு எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. திரையரங்கில் ரசிகர்கள் சிரித்து, கைத்தட்டி ரசித்து வருகிறார்கள் என்பது எங்கள் உழைப்பிற்கு கிடைத்த ஊதியமாக கருதிகிறேன்.

ஒரு நடிகருடன் மீண்டும் மீண்டும் இணைந்து நடிப்பது இயல்பான விஷயம். சந்தானம் போன்று நன்றாக நடிக்கக்கூடிய, நகைச்சுவை உணர்வுமிக்க ஒருவருடன் பணிபுரிவதற்கு எந்த கதாநாயகியும் எளிதில் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம்தான்.

குடும்பத்துடன் அனைவரும் கண்டுகளிக்கக்கூடிய படம் என்பதால் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ போன்ற பெரிய நிறுவனத்தின் உதவி இன்றியமையாததாய் அமைந்தது. படத்தை வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு சென்ற அவர்களுக்கும் எனது நன்றிகள் எனக் குறிப்பிட்டார்.


Post your comment





Related News
மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு
இயக்குனர்களுக்கு தொல்லை கொடுக்கும் சந்தானம் நாயகி
விஸ்வரூபம் 2 இருக்கட்டும், சபாஷ்நாயுடு படத்துக்கும் பிரச்சனையா?
ஒரு தியேட்டரை மையப்படுத்தி உருவாகும் நாகேஷ் திரையரங்கம்!
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பயணித்த சந்தானம் நாயகி
ஆஷ்னா சவேரிக்கு மீண்டும் கைகொடுப்பாரா சந்தானம்?
சந்தானத்தின் மீது ஆஷ்னா ஜாவேரி வருத்தம்!
ஆஷ்னாசாவேரிக்கு ஆர்யா கொடுத்த வாக்குறுதி!
சென்டிமென்டை உடைக்கும் ஆஷ்னா சாவேரி!
மீண்டும் சொந்த தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கும் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions