கூட்டத்தில் ஒருத்தனாக வரும் அசோக் செல்வன்

Bookmark and Share

கூட்டத்தில் ஒருத்தனாக வரும் அசோக் செல்வன்

‘சூது கவ்வும்’ படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்த அசோக் செல்வன் 'பீட்சா' படத்தின் இரண்டாம் பாகமான 'தி வில்லா' படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான ‘தெகிடி’ சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அசோக் செல்வனுக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சவாலே சமாளி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் சிவாவுடன் இணைந்து ‘144’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். தற்போது ‘கூட்டத்தில் ஒருத்தன்’ என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கவுள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நாசர் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கவிருக்கிறார். இவர் ‘பயணம்’, ரத்தசரித்திரம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவர். இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. தற்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். இப்படத்தை ரமணியம் டாக்கிஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். 


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
நடிகர் அசோக்கிற்கு திருமணம், பெண் யாரு தெரியுமா? புகைப்படம் இதோ!
நட்சத்திர கலை விழாவில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை - அதிர்ச்சி புகைப்படம்.!
அசோக் மரணத்தால் தன்னுடைய பட தயாரிப்பாளருக்கு சிவா செய்த வேலை - வெளிவந்த ரகசியம்.!
கொடிவீரனில் ஏற்பட்ட மாற்றம்
அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions