அசோக் செல்வனுக்கு தொடர்ந்து அடிக்கும் யோகம்!

Bookmark and Share

அசோக் செல்வனுக்கு தொடர்ந்து அடிக்கும் யோகம்!

சூதுகவ்வும், பீட்சா-2, தெகிடி ஆகிய படங்களில் நடித்த அசோக்செல்வன் அற்புதமான நடிப்பு திறனை கொண்டவர். இதன்விளைவு, சவாலே சமாளி, கூட்டத்தில் ஒருவன், வரைபடம், 144, பிறைதேடிய நாட்கள் என பல படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். 

இந்த நிலையில், தற்போது அமலாபால் தயாரிப்பில் பிரியதர்ஷன் இயக்கும் சில நேரங்களில் படத்திலும் நாயகனாக நடிக்கிறார் அசோக்செல்வன்.

மேலும் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி ஆகிய இருவரும்தான் இப்படத்தின் பிரதான வேடத்தில் நடிப்பதாக சொன்னார்கள். ஆனால் அந்த படத்தில் பிரபுதேவாவும் தயாரிப்பாளரான பிறகு இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாம்.

மேலும், பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் 3 படங்களை தயாரிப்பதாக அறிவித்த பிரபுதேவா, இதில் இரண்டு படங்களில் டி.இமான் இசையமைப்பதாக சொன்னார். ஆனால் அமலாபாலுடன் இணைந்து தயாரிக்கும் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமானை இசையமைக்க வைக்கும் முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. 

ஆக, பிரியதர்ஷன், ஏ.ஆர்.ரகுமான், பிரகாஷ்ராஜ் என பல ஜாம்பவான்கள் இணைந்துள்ள படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாகியிருப்பது அவருக்கு அடித்த மிகப்பெரிய யோகம்.


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
நடிகர் அசோக்கிற்கு திருமணம், பெண் யாரு தெரியுமா? புகைப்படம் இதோ!
நட்சத்திர கலை விழாவில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை - அதிர்ச்சி புகைப்படம்.!
அசோக் மரணத்தால் தன்னுடைய பட தயாரிப்பாளருக்கு சிவா செய்த வேலை - வெளிவந்த ரகசியம்.!
கொடிவீரனில் ஏற்பட்ட மாற்றம்
அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions