கூட்டத்தில் ஒருவனாக அஷோக்செல்வன்

Bookmark and Share

கூட்டத்தில் ஒருவனாக அஷோக்செல்வன்

'சூது கவ்வும்' படம் மூலம் பரவலாக அறியப்பட்ட அறிமுக நடிகர் அஷோக் செல்வன். அடுத்து பீட்சா படத்தின் இரண்டாம் பாகமான 'தி வில்லா' படத்தில் தனி ஹீரோவாக உயர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து ரமேஷ் இயக்கத்தில் 'தெகிடி' என்ற படத்திலும் ஹீரோவாக நடித்தார். விமர்சனரீதியாக மட்டுமல்ல, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது தெகிடி.  

தெகிடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஷோக் செல்வனைத் தேடி இப்போது வாய்ப்புகள் வரத்தொடங்கி இருக்கின்றன. அருண்பாண்டியன் தயாரிக்கும் சவாலே சமாளி, 144, வரைபடம் ஆகிய படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் அஷோக் செல்வன்.

தவிர 'கூட்டத்தில் ஒருவன்' என்ற படத்திலும் நடிக்க தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.  முழுக்க முழுக்க ரொமான்டிக் கதையான இப்படத்தை ஞானவேல் எனும் அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.

இவர்  பிரகாஷ் ராஜின் 'தோனி' படத்திற்கு  வசனம் எழுதியவர். 'கூட்டத்தில் ஒருவன்'  அஷோக் செல்வனுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார்.  விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.


Post your comment





Related News
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
நடிகர் அசோக்கிற்கு திருமணம், பெண் யாரு தெரியுமா? புகைப்படம் இதோ!
நட்சத்திர கலை விழாவில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை - அதிர்ச்சி புகைப்படம்.!
அசோக் மரணத்தால் தன்னுடைய பட தயாரிப்பாளருக்கு சிவா செய்த வேலை - வெளிவந்த ரகசியம்.!
கொடிவீரனில் ஏற்பட்ட மாற்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions