ஈராஸ் தயாரிக்கும் புதிய படங்களில் நட்ராஜ், அசோக் செல்வன்

Bookmark and Share

ஈராஸ் தயாரிக்கும் புதிய படங்களில் நட்ராஜ், அசோக் செல்வன்

ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தி, தமிழில் நேரடியாக படங்களை தயாரித்தும், விநியோகித்தும் வருகிறது. தமிழில் ‘மாற்றான்’ முதல் ‘உத்தமவில்லன்’ வரை பல படங்களை இந்த நிறுவனம் தயாரித்தும், வெளியிட்டும் வருகிறது. 

இந்நிலையில், தற்போது 2 புதிய தமிழ் படங்களை நேரடியாக தயாரிக்கவிருக்கிறது. இதில் ஒரு படத்திற்கு ‘பேரை தேடிய நாட்கள்’ என்று பெயரிட்டுள்ளனர். ரொமான்டிக் படமாக உருவாகும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. 

இப்படத்தை ஆபிரகாம் பிரபு என்பவர் இயக்குகிறார். இவர் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘யாகவராயினும் நா காக்க’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். 
மேலும், மற்றொரு படத்திற்கு ‘எங்கிட்ட மோதாதே’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ஆக்ஷன் கதையாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நட்டி நடராஜ், ராஜாஜி, விஜயமுருகன், ராதாரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

ராமு செல்லப்பா என்ற புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார். இவர் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். விரைவில் இவ்விரு படங்களின் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளது.


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
திரில்லர் படத்துக்காக ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்பவராக மாறிய நட்டி!
சசிகலா கணவர் நடராஜன் காலமானார், பரோலில் வரும் சசிகலா
நடிகர் அசோக்கிற்கு திருமணம், பெண் யாரு தெரியுமா? புகைப்படம் இதோ!
நட்சத்திர கலை விழாவில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை - அதிர்ச்சி புகைப்படம்.!
அசோக் மரணத்தால் தன்னுடைய பட தயாரிப்பாளருக்கு சிவா செய்த வேலை - வெளிவந்த ரகசியம்.!
கொடிவீரனில் ஏற்பட்ட மாற்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions