மேடையில் நடனமாடியபோது உயிரிழந்த தேசிய விருது நடிகை – அதிர்ச்சியில் திரையுலகம்!

Bookmark and Share

மேடையில் நடனமாடியபோது உயிரிழந்த தேசிய விருது நடிகை – அதிர்ச்சியில் திரையுலகம்!

‘அக்லேச்சே காந்தே’ என்கிற மராத்திய படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் அஸ்வினி ஏக்போதே (வயது 44). இவர் 2009-ம் ஆண்டு தேசிய விருதை பெற்றுள்ளார்.

நடிப்பு மட்டுமல்லாது பரதநாட்டியத்திலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ள இவர் நேற்று முன்தினம் புனே பாரத் நாட்டிய மந்திர் அரங்கில் நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சக கலைஞர்களுடன் இவர் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் இவரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும் வரும் வழியிலேயே இவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் மராத்தி மட்டுமல்லாது இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions