இனி கெஸ்ட் ரோல்களில் நடிக்க மாட்டேன்” - ஆசிப் அலி முடிவு.!

Bookmark and Share

இனி கெஸ்ட் ரோல்களில் நடிக்க மாட்டேன்” - ஆசிப் அலி முடிவு.!

தமிழில் விஜய் சேதுபதி போல மலையாள சினிமாவில் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் இளம் நடிகர் ஆசிப் அலி, யார் கெஸ்ட் ரோலில் நடிக்க அழைத்தாலும் மறுப்புச்சொல்லாமல் நடித்துக்கொடுப்பார்.

ஒரு சில இயக்குனர்கள் உங்களுக்கு முக்கியமான கேரக்டர் சார் என்று சொல்லி நான்கு சீன்கள் வருமாறு காட்சிகளை வைத்து அவரை சமாளித்து விடுகின்றனர். அதிரி புதிரி வெற்றி பெற்ற 'வெள்ளி மூங்கா' படத்தில் இடைவேளை சமயத்தில் இரண்டு காட்சிகளிலும் கடைசியில் க்ளைமாக்சிலும் மட்டுமே ஆசிப் அலி வந்தார்.

இன்னும் சிலரோ க்ளைமாக்ஸ் காட்சியில் வந்து திருப்பத்தை ஏற்படுத்துவது போல கேரக்டரை கொடுத்து ஒரே காட்சியுடன் அனுப்பி விடுகிறார்கள்.. நட்புக்காக நடித்தாலும், விவேக் சொல்வது போல எப்பவாவதுன்னா பரவாயில்ல..

எப்பவுமேன்னா என ஜெர்க் ஆன ஆசிப் அலி, இனி கெஸ்ட் ரோல்களில் நடிப்பதில்லை என முடிவு செய்து, தான் ஹீரோவாக நடிக்கும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். கடந்தவாரம் அவர் ஹீரோவாக நடித்து வெளியான 'யூ டூ புரூட்டஸ்' படம் பாசிட்டிவ் விமர்சனங்களில் சம்பாதித்துள்ளது.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions