நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டார் ஆசிப் அலி!

Bookmark and Share

நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டார் ஆசிப் அலி!

மலையாள சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர் ஆசிப் அலி. ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம்பிடிக்காமல், நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடிக்க அழைத்தாலும் தயங்காமல் ஒப்புக்கொள்வார். அவ்வளவு ஏன்.. யார் கெஸ்ட் ரோலில் நடிக்க அழைத்தாலும் மறுப்புச்சொல்லாமல் நடித்துக்கொடுப்பார். ஒரு சில இயக்குனர்கள் உங்களுக்கு முக்கியமான கேரக்டர் சார் என்று சொல்லி நான்கு சீன்கள் வருமாறு காட்சிகளை வைத்து  அனுப்புவார்கள்.. இட்ஸ் ஒகே பாஸ் என கைகுலுக்கிவிட்டு வருவார்.

இத்தனை நல்ல குணம் படைத்த ஆசிப் அலிக்கு அவரது சில நடத்தைகளே கெட்டபெயரையும் சம்பாதித்து தந்துள்ளன... அதில் முக்கியமான ஒன்று யாரும் அவரை எளிதில் தொடர்புகொள்ள முடியாது என்பதுதான். இன்றைய இளைய தலைமுறையினர் மொபைல்போனிடம் அடிமையாகி கிடக்க, மிக மிக ஆச்சர்யமாக ஆசிப் அலி மொபைல்போனே பயன்படுத்துவதில்லை.. அதுதான் அவருக்கு சங்கடங்களையும் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக அவரை வைத்து படம் பண்ணும் இயக்குனர்களுக்கும், படம் பண்ண நினைப்பவர்களுக்கும் கோபத்தையும் எரிச்சலையும் உண்டுபண்ணியது.  

இதனால் அவர் நடித்துவந்த சில படங்களின் படப்பிடிப்பு தாமதமாக ஆனதுடன், அவருக்கு வரவேண்டிய பல புதிய பட வாய்ப்புகளும் கைநழுவி போய்விட்டன. நிலைமை சீரியசாவதை உணர்ந்த ஆசிப் அலி நேற்று பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அனைவர் முன்னிலையிலும் தனது நடத்தைக்காக மன்னிப்பு கேட்டார். அத்துடன் இனிமேல் இதுபோன்ற தவறுகள நிகழாவண்ணம் பார்த்துக்கொள்வதாக இந்த சந்திப்பின் மூலம் திரையுலகத்தினருக்கு அறிவிப்பும் கொடுத்துள்ளார். எப்படியோ தவறை உணர்ந்துடன் மன்னிப்பும் கேட்டாரே.. பெரிய விஷயம் தான்.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions