போலி அக்கவுண்ட் - அசின் புகார்!

Bookmark and Share

போலி அக்கவுண்ட் - அசின் புகார்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த அசின், இந்தி கஜினி மூலம் பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வந்தார். ஆனால் சில படங்களின் தோல்வியால் அசின் வாய்ப்பிழந்து சிலகாலம் வீட்டில் சும்மா இருந்தார்.

கடைசியாக பாலிவுட்டில் கில்லாடி 786 என்ற படத்தில் நடித்தவர், இப்போது அபிஷேக் பச்சன் உடன் 'ஆல் இஸ் வெல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளங்களில் தன் பெயரில் போலியாக இருக்கும் அக்கவுண்ட்களை தடுக்க சொல்லி புகார் செய்ய இருக்கிறார் அசின்.

இதுகுறித்து அசினின் உதவியாளர் கூறியுள்ளதாவது,

சினிமா நட்சத்திரங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ள, நடிகை அசினின் பெயரில் சிலர் போலியாக அக்கவுண்ட் துவக்கியுள்ளனர். இன்ஸ்ட்ராகிராம் தவிர்த்து வேறு எந்த சமூக வலைதளத்திலும் அசின் இல்லை என்பதை இங்கு தெளிவுப்படுத்தி கொள்கிறோம்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சொல்லி அசின் வலியுறுத்தியுள்ளார், சட்டப்படி நாங்கள் நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
அட இந்த நடிகைக்கு இதை கற்று கொடுத்ததே விஜய் தானாம் - இது தெரியுமா?
அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த தல தளபதி நாயகி.!
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் ஆவேசத்தில் ரசிகர் செய்த வேலை!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
சிவலிங்கா முதல் நாள் பிரமாண்ட வசூல்
வெட்கமா எனக்கா? நடிகை ரித்திகா சிங் மனம் திறந்த உண்மை
அனுஷ்காவுடன் இணைந்த ரித்திகா சிங்
சூர்யா, ரித்திகா நடிக்க இருந்த படத்தில் இப்போது யார் தெரியுமா?
முன்னணி இயக்குனர், முன்னணி நடிகை கமிட் ஆகியும் சிம்பு படம் நின்றது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions