ஆதரவற்றோர் இல்லத்துக்கு உதவிய அசின்

Bookmark and Share

ஆதரவற்றோர் இல்லத்துக்கு உதவிய அசின்

என்னை ஏதாவது ஒரு வகையில் வம்பிழுத்துவிடுவதுதான் மீடியாக்களின் வேலையாக இருக்கிறது என்று அடிக்கடி புலம்பிக்கொண்டிருக்கிறாராம் அசின். இப்போது பாலிவுட் மீடியாக்கள் அவருக்கு பாராட்டிதழ் வாசித்திருக்கிறது.

அபிஷேக் பச்சனுடன் ‘ஆல் ஈஸ் வெல்’ என ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் அசின். அங்குள்ள ஹீரோயின்கள் பார்ட்டி விசிட், அழகு அணிவகுப்பு என்று கவனத்தை செலுத்திக்கொண்டிருக்கையில் உருப்படியான காரியத்தால் கவனத்தை கவர்ந்திருக்கிறாராம் அசின்.

மும்பை மேற்கு புறநகர் பகுதி போரிவில்லி பகுதியில் இளம்பெண்களுக்கான ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லம் உள்ளது. சமீபத்தில் அந்த இல்லத்துக்கு காரில் விசிட் செய்த அசின், தான் பயன்படுத்திய 100 உடைகளை மூட்டையாக கட்டி நன்கொடையாக அளித்தார்.

இதுபற்றி அவரது தரப்பில் கூறும்போது,

’அசின் சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்து நிறைய நற்பணிகளை மேற்கொள்கிறார். ஆனால் அந்த தகவலை யாரிடமும் பகிர்ந்துகொள்வதில்லை. தன்னால் முடிந்த உதவிகளை ஏழ்மையிலிருப்பவர்களுக்கு செய்ய எண்ணுகிறார்.

முன்னதாக ரத்ததான முகாமில் அவர் பலமுறை பங்கேற்றிருப்பதுடன் தனது உடல் உறுப்புகளையும் தானம் செய்திருக்கிறார். குழந்தைகளுக்கான நற்பணிகளிலும் அவர் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார்’ என்றனர். 


Post your comment





Related News
அட இந்த நடிகைக்கு இதை கற்று கொடுத்ததே விஜய் தானாம் - இது தெரியுமா?
அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த தல தளபதி நாயகி.!
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் ஆவேசத்தில் ரசிகர் செய்த வேலை!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
சிவலிங்கா முதல் நாள் பிரமாண்ட வசூல்
வெட்கமா எனக்கா? நடிகை ரித்திகா சிங் மனம் திறந்த உண்மை
அனுஷ்காவுடன் இணைந்த ரித்திகா சிங்
சூர்யா, ரித்திகா நடிக்க இருந்த படத்தில் இப்போது யார் தெரியுமா?
முன்னணி இயக்குனர், முன்னணி நடிகை கமிட் ஆகியும் சிம்பு படம் நின்றது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions