அசின் திருமணம் ஜனவரி 23-ந்தேதி நடக்கிறது

Bookmark and Share

அசின் திருமணம் ஜனவரி 23-ந்தேதி நடக்கிறது

ஜெயம் ரவி ஜோடியாக எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமானவர் அசின். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்தார். விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்றோருடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அசின் நடித்த ‘கஜினி’ படம் வசூலில் சாதனை படைத்தது.

இந்த படம் அமீர்கான் நடிக்க இந்தியில் மொழிமாற்றம் செய்தபோது அதிலும் அசினே நடித்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியதால் இந்தி திரையுலகிலும் கலக்கினார்.

சல்மான்கான், அக்ஷய்குமார், அபிஷேக்பச்சன், அஜய் தேவ்கான், ஜான் ஆபிரகாம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இந்த நிலையில் அசினுக்கும் மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவன உரிமையாளர் ராகுல் சர்மாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதனை அவர்கள் பெற்றோரும் ஏற்றுக்கொண்டனர். கடந்த நவம்பர் 26-ந் தேதி இவர்கள் திருமணம் நடக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அப்போது திருமணத்தை நடத்தாமல் தள்ளி வைத்து விட்டனர். திருமண தேதியையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) 23-ந் தேதி திருமணத்தை நடத்த தற்போது முடிவு செய்துள்ளனர்.

டெல்லியில் உள்ள பண்ணை வீட்டில் அசின்-ராகுல் சர்மா திருமணம் நடக்கிறது. மும்பையில் திருமண வரவேற்பை நடத்துகிறார்கள். திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு நடிகர்-நடிகைகள் மற்றும் உறவினர்களுக்கு வினியோகித்து வருகிறார்கள்.

திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலக அசின் திட்டமிட்டு உள்ளார். தற்போது புதுப்படங்களில் அவர் ஒப்பந்தமாகவில்லை.


Post your comment





Related News
அட இந்த நடிகைக்கு இதை கற்று கொடுத்ததே விஜய் தானாம் - இது தெரியுமா?
அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த தல தளபதி நாயகி.!
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் ஆவேசத்தில் ரசிகர் செய்த வேலை!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
சிவலிங்கா முதல் நாள் பிரமாண்ட வசூல்
வெட்கமா எனக்கா? நடிகை ரித்திகா சிங் மனம் திறந்த உண்மை
அனுஷ்காவுடன் இணைந்த ரித்திகா சிங்
சூர்யா, ரித்திகா நடிக்க இருந்த படத்தில் இப்போது யார் தெரியுமா?
முன்னணி இயக்குனர், முன்னணி நடிகை கமிட் ஆகியும் சிம்பு படம் நின்றது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions