அனுஷ்காவை திட்டுவது முட்டாள்தனம் : ரசிகர்கள் மீது அசின் திடீர் பாய்ச்சல்

Bookmark and Share

அனுஷ்காவை திட்டுவது முட்டாள்தனம் : ரசிகர்கள் மீது அசின் திடீர் பாய்ச்சல்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் நடிகைகளுடன் நெருக்கமான நடப்பில் உள்ளனர். சமீப காலமாக விராத் கோஹ்லியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் தங்கள் நெருக்கத்தை வெளிப்படையாக காட்டி வருகின்றனர்.

வெளிநாடுகளில் ஒன்றாக சுற்றுவது, ஒரே அறையில் தங்குவது, இதுபற்றி பத்திரிகையாளர்கள் கேட்டால் அவர்கள் மீது பாய்வது என பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா-இந்தியா மோதியது.

சிட்னியில் நடந்த இப்போட்டியில் பங்கேற்கும் தனது காதலன் விராத்தை சப்போர்ட் செய்வதற்காக அனுஷ்கா சர்மா நேரில் சென்றார். இப்போட்டியில் விராத்தின் பேட்டிங் மோசமாக இருந்ததுடன் 13 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. இணையதள வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் விராத், அனுஷ்கா சர்மா இருவரையும் திட்டி மெசேஜ் போட்டனர்.

இந்நிலையில் அனுஷ்கா சர்மாவுக்கு நடிகை அசின் வக்காலத்து வாங்கி இருக்கிறார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அனுஷ்காவை திட்டுவது கேலிக்கூத்தானது. இந்திய அணியை ஆதரிக்க சென்றது அவ்வளவு பெரிய தவறா? சிலர் தங்களது முட்டாள்தனத்தை வேறு விதமாக காட்டிக்கொண்டிருக்கிறார்கள்'  என குறிப்பிட்டிருக்கிறார்.

 இதேபோல் பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, சுஷ்மிதா சென் உள்ளிட்ட பலர் அனுஷ்கா சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துவெளியிட்டுள்ளனர். டோனியுடன் இணைத்து கிசு கிசுக்கப்பட்டவர் அசின். அனுஷ்காவுக்கு வக்காலத்து வாங்குவதுபோல் டோனி அணியை அவர் சப்போர்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
சகநடிகரை காலணியால் தாக்கிய டிவி நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions