ராகுல்சர்மா,அசின் இருவரும் பொருத்தமான ஜோடி: அக்ஷய் குமார் நெகிழ்ச்சி

Bookmark and Share

ராகுல்சர்மா,அசின் இருவரும் பொருத்தமான ஜோடி: அக்ஷய் குமார் நெகிழ்ச்சி

அசினுக்கும், மைக்ரோமேக்ஸ் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவுக்கும் டெல்லியில் திருமணம் நடந்துள்ளது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட 100 பேர் மட்டுமே இந்த திருமணத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தார்கள். 

இதையடுத்து நிறைய பேரை அழைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த திருமண வரவேற்பு நாளை (23–ந்தேதி) மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. 

அசின் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி படங்களில் நடித்து இருக்கிறார். தன்னுடன் ஜோடியாக நடித்த அனைத்து கதாநாயகர்கள் மற்றும் நடிகைகளுக்கும் அழைப்பு அனுப்பி இருக்கிறார்.

தமிழில் கமல்ஹாசன், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட கதாநாயகர்களுடன் நடித்து இருக்கிறார். இவர்களுக்கு அழைப்பு அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. 

வரவேற்புக்காக பிரத்யேகமாக உடைகள், நகைகள், வாங்கி இருக்கிறார். அசின், ராகுல் சர்மா திருமணம் நடப்பதற்கு இந்தி நடிகர் அக்ஷய் குமார் முக்கிய காரணமாகும். ராகுல் சர்மாவும் அக்ஷய் குமாரும் நெருங்கிய நண்பர்கள்.

‘கில்லாடி 786’ என்ற இந்தி படத்தில் அக்ஷய்குமாரும், அசினும் ஜோடியாக நடித்தனர். அப்போதுதான் ராகுல்சர்மாவுக்கும் அசினுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இருவர் காதலுக்கும் அக்ஷய்குமார் உதவியாக இருந்தார்.

திருமணம் செய்து கொள்ளும்படியும் யோசனை தெரிவித்தார். அவர் முயற்சியாலேயே இந்த திருமணம் நடந்துள்ளது. 

இது குறித்து அக்ஷய்குமார் அளித்த பேட்டி வருமாறு:– அசினுக்கும், ராகுல்சர்மாவுக்கும் திருமணம் நடந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இருவரும் பொருத்தமான ஜோடி. அவர்கள் ஒன்று சேர நானும் காரணமாக இருந்தேன். 

திருமணம் என்பது மகிழ்ச்சியான தருணம். அது அவர்கள் வாழ்க்கையில் நடந்துள்ளது. இந்த சந்தோஷம் நீண்ட நாட்கள் நிலைக்க வேண்டும். அவர்கள் நீடுழிவாழ வாழ்த்துகிறேன்.

அசினும், ராகுல்சர்மாவும் சொந்த வாழ்க்கையில் தனிமையை விரும்புகிறவர்கள். அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு எல்லோரும் மதிப்பு அளிக்க வேண்டும். 

இவ்வாறு அக்ஷய்குமார் கூறினார்.


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
சகநடிகரை காலணியால் தாக்கிய டிவி நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions