சிம்ரன் ரூட்டில் வந்தவர், அசின் ரூட்டில் போகாமல் இருந்தால் சரி..!

Bookmark and Share

சிம்ரன் ரூட்டில் வந்தவர், அசின் ரூட்டில் போகாமல் இருந்தால் சரி..!

இதற்கு முன் அதாவது கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு முன் தமிழுக்கு சிம்ரன் அறிமுகமானபோது, ஒரே நேரத்தில் 'நேருக்கு நேர்', 'வி.ஐ.பி', 'ஒன்ஸ்மோர்', 'பூச்சூடவா' என நான்கு படங்களில் நடித்தார்.

நான்கு படங்களும் ஒரே வருடத்தில் வெவ்வேறு தேதிகளில் முன்னே பின்னே ரிலீசனாலும், சிம்ரனுக்கு கிடைத்த வரவேற்பால் ஒவ்வொருவரும் நாங்கள் தான் சிம்ரனை அறிமுகம் செய்தோம் என பெருமைப்பட்டுக்கொண்டார்கள்.

அப்போது சிம்ரனுக்கு நடந்த நிகழ்வு, அதற்கடுத்து இப்போது மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நடக்கிறது. மலையாளத்தில் திலீப்புடன் இவர் நடித்த 'ரிங் மாஸ்டர்' படத்தை பார்த்தவர்கள் இவரது எளிமையான அழகில் மயங்கிப்போனார்கள்.

இவரது அம்மா மேனகாவும் தமிழ் நடிகை என்பது இவருக்கு கூடுதல் தகுதியாகிப்போனது. சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்திள் நடிப்பதற்காக தமிழுக்கு வந்த கீர்த்தி சுரேஷ், அடுத்து விக்ரம் பிரபுவுடன் 'இது என்ன மாயம்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

தொடர்ந்து 'பாம்பு சட்டை' படத்தில் சிம்ஹாவுக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்ப்பையும் ஏற்றார். அடுத்து இயக்குனர் டீகேவின் 'கவலைவேண்டாம்' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் இன்னும் ஒரு படம் கூட  வெளியாகாத நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு இந்த அளவுக்கு வரவேற்பு இருப்பது சிம்ரன் காலகட்டத்தைத்தான் ஞாபகப்படுத்துகிறது.

ஆனால் அடுத்ததாக ஒரு மலையாளப்படத்தில் கூட நடிக்க இவர் ஒப்பந்தமாகவில்லை என்பதை பார்த்தால் அசின், நயன்தாரா பாணியில் மலையாளத்தை சுத்தமாக மறந்துவிட்டு இங்கேயே செட்டிலாகி விடுவார் போலத்தான் தெரிகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions