தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்ற அசுரா

Bookmark and Share

தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்ற அசுரா

டோலிவுட்டில் மாறுபட்ட கதைக் களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் தெலுங்கு நடிகர் ரோஹித் தற்போது அசுரா படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் மட்டுமல்லாது  ரோஹித்,  நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளிவந்து விமர்சக ரீதியாக பாராட்டுகளைப் பெற்ற  மௌன குரு படத்தின் தெலுங்கு ரீமேக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகின்றார்.

அண்மையில் தணிக்கைக்குச் சென்ற அசுரா படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். மேலும் படத்திற்கு யு/ஏ  சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

தயாரிப்பாளர் ஷியாம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் கிருஷ்ணா விஜய் இயக்கியுள்ளார். திகில் திரைப்படமான அசுரா படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் இமாதம் 29  ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions