வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்

Bookmark and Share

வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் மாரி 2 படம் நேற்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. அதன்படி படத்திற்கு `அசுரன்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

வி கிரிகேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர ராம்குமார், மாரி செல்வராஜ், துரை செந்தில்குமார் இயக்கத்தில் தலா ஒரு படங்களில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். அத்துடன் வடசென்னை இரண்டாவது பாகத்திலும் நடிக்க இருக்கிறார். மேலும் தனுஷ் ஒரு படத்தை இயக்கி, நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions