ஹாலிவுட் கலைஞரிடம் மல்யுத்த பயிற்சி எடுக்கும் அஸ்வின் கக்குமனு!

Bookmark and Share

ஹாலிவுட் கலைஞரிடம் மல்யுத்த பயிற்சி எடுக்கும் அஸ்வின் கக்குமனு!

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ஜீரோ’ உள்ளிட்ட படங்களில் நடித்த அஸ்வின் கக்குமனு தற்போது ‘இது வேதாளம் சொல்லும் கதை’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் இவருடன் மற்றொரு ஹீரோவாக ‘ஆரண்ய காண்டம்’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களில் நடித்த குரு சோமசுந்தரம் நடிக்கிறார்.

ரதிந்தரன் ஆர்.பிரசாத் இயக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில் அஸ்வின் கக்குமனு மல்யுத்த வீரராக நடிக்கிறாராம். இதற்காக ஹாலிவுட் நடிகரும், பிரபல மல்யுத்த வீரருமான க்ரெக் ப்யூரிட்ஜ் அஸ்வின் கக்குமனு உள்ளிட்ட 30 மல்யுத்த வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இவர் இந்த படத்தில் வில்லனாகவும் நடிக்கவுள்ளார்.

இத்தாலியை சேர்ந்த ராபர்டோ ஜாஜெர் என்பவர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஹாலிவுட் கலைஞர்கள் இணைந்து பணியாற்றும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை மத்திய பிரதேசத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கில் இம்மாதம் தொடங்கவுள்ளனர். அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் சென்னையிலும் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். 

இப்படத்தை ஹோல் வைட் ஓர்ல்ட் ஃபிலிம்ஸ் சார்பில் பஸாக் கேஸியர் பிரசாத் தயாரிக்க உள்ளார்.


Post your comment





Related News
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிடித்த தமிழ் படம் எது தெரியுமா?
வெங்கட் பிரபு படத்தில் முரளி விஜய், அஸ்வின்?
ஜீரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம் வைத்த இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர்!
மக்களுக்காக உதவுவேன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேட்டி!
அஜித்துடன் மீண்டும் நடிக்க ஏங்கினேன்: அஸ்வின்
பிரபுதேவாவுடன் காதலா?: புதுமுகம் தேஜஸ்வினி
தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்கவைத்த இலங்கை கலைஞர்களின் பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions