ஜீரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

ஜீரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மங்காத்தா புகழ் அஸ்வின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ஜீரோ’. இதில் அஸ்வினுக்கு ஜோடியாக ‘நெடுஞ்சாலை’ ஷிவேதா நடித்துள்ளார். மேலும் ஜே.டி.சக்கரவர்த்தி, ரவிராகவேந்திரா, துளசி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தை ஷிவ் மோஹா என்பவர் இயக்கியிருக்கிறார்.

புளூஓசன் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இவருடைய இசையில் உருவான பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வரும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கின்றனர்.

இப்படம் மார்ச் 25ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் உறுதிபட கூறியிருக்கின்றனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions