ஆகஸ்டில் அதர்வாவின் ஈட்டி வெளியாகிறது!

Bookmark and Share

ஆகஸ்டில் அதர்வாவின் ஈட்டி வெளியாகிறது!

பரதேசி படத்திற்கு பிறகு அதர்வா கமிட்டான படங்களில் ஈட்டி முக்கியமான படம். இதில் தடகள வீரராக நடிக்கிறார். ரவி அரசு இயக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். அண்ணாமலை பாடல்கள் எழுதியிருக்கிறார்.

அதர்வாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கும் இந்த படத்திற்காக பல மாதங்களாக உடற்பயிற்சி செய்து தனது உடல்கட்டை பக்காவாக மாற்றி நடித்திருக்கும் அதர்வா, தற்போது இப்படத்தில் நடித்து முடித்து விட்டதோடு, இந்த படம் தனக்கு பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்திருக்கிறார்.

இப்படம் பற்றி டைரக்டர் ரவி அரசு கூறுகையில், ஈட்டி படம் பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது. ஓட்டப்பந்தய விளையாட்டை மையமாகக்கொண்ட இந்த கதையில் கமர்சியலுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளது.

இந்த படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். சில இடங்களில் அவரது பாடி லாங்குவேஜை மாற்ற வேண்டியிருந்ததால்தான் அதிக காலஅவகாசம் எடுத்து படப்பிடிப்பு நடத்தினோம்.

இருப்பினும், தற்போது படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ஆகஸ்டில் ஈட்டி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions