அதர்வாவின் சண்டித்தனம்!

Bookmark and Share

அதர்வாவின் சண்டித்தனம்!

பாலா தயாரிப்பில் களவாணி சற்குணம் இயக்கியுள்ள படத்திற்கு சண்டிவீரன் என்று அறிவித்திருக்கும் நிலையில், கார்த்திக்கிற்கு பருத்தி வீரன் மாதிரி எனக்கு இந்த சண்டி வீரன் அமையும் என்று தனது சினிமா நண்பர்களிடம் நம்பிக்கை தெரிவித்து வருகிறார் அதர்வா.

மேலும், அவர் மதுரையில் சண்டித்தனம் செய்பவராக நடித்தார், நானோ தஞ்சாவூர் பகுதியில் சண்டித்தனம் செய்பவராக நடித்திருக்கிறேன். அதோடு, பேண்ட் சட்டையின் மடிப்பு கலையாத வேடங்களில் நடித்த என்னை பாலா தான் பரதேசியில் பக்காவாக மாற்றிக்காட்டினார்.

அந்த படம் எனது திறமைக்கு வெளிச்சம் போட்டது. அந்த வகையில், இந்த சண்டிவீரன் என்னை முழுக்க முழுக்க வித்தியாசப்படுத்தி காண்பித்திருக்கிறது. கிராமப்புறங்களில் லுங்கியைக்கட்டிக்கொண்டு தோளில் டவலை போட்டபடி புழுதி பறக்க பறக்க இந்த படத்தில் நடித்திருக்கிறேன்.

இது என்னைப்பார்க்கும் ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தையும், எனது இன்னொரு முகத்தையும் காட்டும் வகையில் அமைந்திருக்கிறது. ஆக, பாலாவின் தயாரிப்பில் பரதேசி என்னை வித்தியாசப்படுத்தியது போன்று இப்போது அவர் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் நடித்துள்ள இந்த சண்டி வீரனும் என்னை இன்னொரு கோணத்தில் வித்தியாசப்படுத்தியிருக்கிறது என்று கூறி வரும் அதர்வா, இதற்கு முன்பு நான் நடித்த சில படங்கள் என்னை ஏமாற்றியபோதும். இந்த படம் என்னை கண்டிப்பாக ஏமாற்றாது என்றும் அடித்து சொல்லி வருகிறார்.


Post your comment





Related News
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
நான் சின்ன பொண்ணுங்க..... 'மதுரைவீரன்'மீனாட்சி
மதுரவீரன் படத்தில் தளபதி விஜய் - வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்.!
ஜல்லிகட்டு பற்றி நாம் அறியாத பல விஷயங்களை "மதுரவீரன்" பேசும் – சண்முகபாண்டியன்
பிப்ரவரி-2ல் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸா? - உங்க சாய்ஸ் எது?
“மதுரவீரன்” ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்லாமல் அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே இருக்கும் – இயக்குநர் P.G. முத்தையா
`மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions