சீனுராமசாமியின் அடுத்தப்பட ஹீரோ அதர்வா

Bookmark and Share

சீனுராமசாமியின் அடுத்தப்பட ஹீரோ அதர்வா

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு நடித்திருக்கும் படம் - 'இடம் பொருள் ஏவல்'. லிங்குசாமி தயாரித்துள்ள இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. விரைவில் வெளியாகும் இப்படத்தைத் தொடர்ந்து அதர்வாவை வைத்து தன் அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார் சீனு ராமசாமி.  

கதாநாயகி, மற்றும் உடன் நடிக்கும் நடிகர்கள், டெக்னீஷியன் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் விரைவில் அதிகாரபூர்வமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாணா காத்தாடி, முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்புக்குதிரை என இதுவரை நான்கு படங்களில் நடித்திருக்கிறார் அதர்வா. இந்த நான்கு படங்களுமே கமர்ஷியலாக வெற்றியடையவில்லை.

பாலாவின் இயக்கத்தில் பரதேசி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் பெரிய அளவில் பேசப்பட்டார் அதர்வா. இப்போது பாலாவின் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் சண்டிவீரன் படத்தில் நடித்து வரும் அதர்வா, ரவி அரசு இயக்கத்தில் ஈட்டி, டி.என்.சந்தோஷ் இயக்கத்தில் 'கணிதன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த மூன்று படங்களுமே முடியும் தருவாயில் இருக்கின்றன. இப்படங்களைத் தொடர்ந்து அதர்வா நடிக்க ஒப்புக் கொண்டிருப்பது சீனு ராமசாமி இயக்கும் படத்தில் மட்டுமே.


Post your comment





Related News
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
தமிழை புறக்கணிக்கிறோம் - சீனுராமசாமி வேதனை
டிராபிக் ராமசாமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தயாரிப்பாளரின் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் உத்தமரா- இயக்குனர் போட்ட திடுக்கிடும் பதிவு
அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி
முதன்முறையாக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசைமைக்கும் பிரபல இயக்குனரின் படம்
யுவனுக்கு மிக உயரிய விருது! பிரபல இயக்குனர் வேண்டுகோள்
மறைந்த துக்ளக் சோவுக்கு பத்மபூஷண் விருது - மத்திய அரசு அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions