ஒரு வாரம் நள்ளிரவில் படமாக்கப்பட்ட ஈட்டி கிளைமாக்ஸ்

Bookmark and Share

ஒரு வாரம் நள்ளிரவில் படமாக்கப்பட்ட ஈட்டி கிளைமாக்ஸ்

அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிக்கும் படம் ஈட்டி, வெற்றி மாறன் உதவியாளர் ரவி அரசு இயக்குகிறார். குளோபல் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவு செய்கிறார். நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதன் கிளைமாக்ஸ் காட்சிகள் சென்னையில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் ஒருவாரமாக படமாக்கப்பட்டது.

இதுகுறித்து இயக்குனர் ரவி அரசு கூறியதாவது: இது ஸ்போர்ட்ஸ் படம்தான். ஆனால் முழுக்க முழுக்க ஸ்போர்ட்ஸ் பற்றிய படம் இல்லை. அதர்வா தடகள வீரராக நடித்திருக்கிறார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த அதர்வா சென்னையில் நடக்கும் ஒரு தடகள போட்டிக்காக வருகிறார். வந்த இடத்தில் ஒரு அண்டர்கிரவுண்ட் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். தனது தடகள திறமையை பயன்படுத்தி அவர்களிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை.

தடகளம் வெறும் விளையாட்டல்ல அது வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு உதவும் என்பதை சொல்லும் படம். அதோடு இதுவரை சினிமாவில் காட்டப்படாத ஒரு அண்டர்கிரவுண்ட் உலகத்தையும் காட்டுகிறோம். இதன் கிளைமாக்ஸ் ஒரு சேசிங். அதுவும் சென்னையில்.

சென்னை நகரில் பகலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடையாது. அதனால் சேசிங் காட்சியை இரவில் நடப்பதாக மாற்றி நள்ளிரவு 2 மணிக்கு மேல் சேசிங்கை படமாக்கினோம். இப்படி ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்தி கிளைமாக்சை எடுத்து முடித்தோம். என்றார்.

 


Post your comment





Related News
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்
இந்திய அளவில் ட்ரெண்டாகும் தளபதி விஜய் மகள் திவ்யா - அசத்தலான புகைப்படம் உள்ளே.!
வாய்ப்புகள் இல்லாததால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு - இதாவது கை கொடுக்குமா?
வாய்ப்புகள் குறைந்ததால் ஸ்ரீதிவ்யா அதிரடி முடிவு
2 குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை இரண்டாவது திருமணம்
டிடி-யின் நிகழ்ச்சிக்கு முதல் முறையாக வரும் பிரபலம், குஷியில் ரசிகர்கள்.!
தொகுப்பாளினி டிடி பாத்தாச்சு, அவங்க அம்மாவை பார்த்திருக்கிறீங்களா
டி.டி எடுத்த திடீர் முடிவு, அதிர்ச்சியில் ரசிகர்கள் - ஏன் இப்படி?
விஜய் டீவியை மேடையிலேயே கலாய்த்த டிடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions