திகில் பட இயக்குனருடன் கைகோர்க்கும் அதர்வா!

Bookmark and Share

திகில் பட இயக்குனருடன் கைகோர்க்கும் அதர்வா!

அருள்நிதி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘டிமான்ட்டி காலனி’. இந்த படத்தை அஜய் ஞானமுத்து என்பவர் இயக்கினார். திகில் படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார்.

அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் அதர்வா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகையை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படமும் திகில் படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதர்வா தற்போது பத்ரி வெங்கடேஷ் இயக்கி வரும் ‘செம போத ஆகாத’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படம் முடிந்த பிறகு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா நடிக்க இருக்கிறார்.


Post your comment





Related News
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா
பிரபல தயாரிப்பாளர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
பால முரளி கிருஷ்ணா உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
கர்நாடக இசை மேதை பால முரளி கிருஷ்ணா உடலுக்கு கமல்ஹாசன் அஞ்சலி
பாலமுரளி கிருஷ்ணா மரணம்: கருணாநிதி இரங்கல்
பாலமுரளிகிருஷ்ணா இழப்பை ஈடு செய்ய முடியாது: ஜெயலலிதா இரங்கல்
பாலமுரளி கிருஷ்ணா மறைவால் இசை உலகம் தனது கிரீடத்தை இழந்து விட்டது: கவிஞர் வைரமுத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions